Home /News /cuddalore /

ஜெயிலரை குடும்பத்துடன் கொல்ல முயற்சி.. கூலிப் படை மூலம் சிறையில் உள்ள கைதி திட்டம்?

ஜெயிலரை குடும்பத்துடன் கொல்ல முயற்சி.. கூலிப் படை மூலம் சிறையில் உள்ள கைதி திட்டம்?

படம் : கடலூர் மத்திய சிறை

படம் : கடலூர் மத்திய சிறை

சிறை கைதி எண்ணூர் தனசேகரன் கூலிப்படை மூலம் உதவி ஜெயிலர் மணிகண்டனை குடும்பத்துடன் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Cuddalore, India
    கடலூர் மத்திய சிறையின் உதவி ஜெயிலர் மணிகண்டனை குடும்பத்துடன் தீ வைத்து கொளுத்த முயன்ற கைதியின் அடியாட்களால் கடலூரில் பரபரப்பு ஏற்படுள்ளது.

    கடலூர் கேப்பர் மலையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மத்திய சிறைச்சாலை. இந்த சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள நிலையில் உயர் பாதுகாப்பு அறை, பாதுகாப்பு அறை, பொது அறைகள் என சிறையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் உயர் பாதுகாப்பு அறையில் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களும், பாதுகாப்பு அறையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணிபுரிந்து வரும் மணிகண்டன் சிறை அருகிலேயே உள்ள சிறை காவலர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை மணிகண்டன் வெளியூர் சென்று இருந்த போது வீட்டின் ஒரு அறையில் திடீரென தீப்பற்றி எரிந்து அந்த பெட்ரோல் வாசனையானது அவர் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. மணிகண்டனின் தாய் தந்தை மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருக்க இந்த பெட்ரோல் வாசனை மற்றும் தீ எறிவது அவர்களுக்கு தெரிய வந்தால் உடனடியாக அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது இரண்டு அறைகள் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததுடன் சக பணியாளர்கள் உதவியுடன் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டின் அருகிலேயே பெட்ரோல் கொண்டு வந்த பாட்டில்கள் கிடந்ததால் இது திட்டமிட்ட தீவைப்பு என்பதை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கடலூர் மத்திய சிறையில் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி உதவி ஜெயிலர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது 18 கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள எண்ணூர் தனசேகரன் என்ற பிரபல ரவுடி இடம் இருந்து ஆண்ட்ராய்டு செல் போன், பேட்டரிகள் மற்றும் சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ALSO READ | ஜெயலலிதா மரணம் : 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது ஆறுமுகசாமி ஆணையம் 

    இது கைப்பற்றப்பட்டவுடன் மணிகண்டன் உடன் கடும் வாக்குவாதத்தில் எண்ணூர் தனசேகரன் ஈடுபட்டதுடன் மணிகண்டனை தாக்க வந்துள்ளார். இதனை அடுத்து அவரை கண்டித்த மணிகண்டன் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து புகார் அளித்ததால் அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனசேகரனின் வழக்கறிஞர்கள் அடுத்த இரண்டு தினம் கழித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் எண்ணூர் தனசேகரனை ஜெயிலர் மணிகண்டன் தாக்கியதாகவும் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

    அந்த புகார் மனுவை முதுநகர் போலீசார் வாங்க மறுத்துரை தொடர்ந்து தங்கள் மனித உரிமை கழகத்தில் இது குறித்து புகார் செய்ய போவதாக தெரிவித்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு எண்ணூர் தனசேகரனின் கூலிப்படை தான் காரணமாக இருக்க வேண்டும் என போலீசார் தற்பொழுது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சிறை காவலர் குடியிருப்பில் உதவி ஜெயிலர் வீட்டில் பெட்ரோல் ஊத்தி வைக்கப்பட்ட சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் : பிரேம் ஆனந்த்.டி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Crime News, Cuddalore

    அடுத்த செய்தி