ஹோம் /நியூஸ் /கடலூர் /

ஓடும் பேருந்தில் இருந்து கை குழந்தையுடன் தவறி விழுந்த பெண்.. ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு..!

ஓடும் பேருந்தில் இருந்து கை குழந்தையுடன் தவறி விழுந்த பெண்.. ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு..!

விபத்து

விபத்து

பேருந்தை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டியது மற்றும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Cuddalore | Cuddalore | Tamil Nadu

  கடலூர் அருகே பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் பெண் கீழே விழுந்த விவகாரத்தில் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  நேற்று முன்தினம் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகருக்குள் அதிவேகமாக வந்த நிலையில் ,இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது பேருந்தின் பின் படிக்கட்டு அருகே குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் தலைக்குப்புற கைக்குழந்தையுடன் வெளியில் விழுந்தார்.

  இதனை கவனிக்காத ஓட்டுநர் மீண்டும் பேருந்தை இயக்கத் தொடங்கினார். அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே பேருந்தை நிறுத்தினார். அந்த குழந்தையையும் தாயையும் அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு அந்தப் பெண் புகார் எதுவும் கொடுக்காமல் சென்று விட்டார். இந்த நிலையில் இந்த பெண் பேருந்தில் இருந்து தலைக்குப்பற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீசார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பெண் யார் என தேடி வந்தனர்.

  நேற்றிரவு இந்த பெண் கடலூர் மாவட்டம் சின்னப்பகண்டை கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த பெண் வீட்டிற்கு சென்ற போலீசார் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அதிவேகமாக பேருந்து வந்த நிலையில் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் கையில் குழந்தை வைத்திருந்த நிலையில் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தான் வெளியில் விழுந்ததாக அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெல்லிக்குப்பம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் தனியார் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பேருந்தை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டியது மற்றும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதாக இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  செய்தியாளர் : பிரேம், கடலூர்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Bus accident, Cuddalore, FIR Filed