ஹோம் /நியூஸ் /கடலூர் /

பூட்டிய காரில் சிக்கிய 2 வயது குழந்தை... கதவை திறக்க முடியாமல் திணறிய பெற்றோர்!

பூட்டிய காரில் சிக்கிய 2 வயது குழந்தை... கதவை திறக்க முடியாமல் திணறிய பெற்றோர்!

காருக்குள் சிக்கி தவித்த குழந்தை மீட்பு

காருக்குள் சிக்கி தவித்த குழந்தை மீட்பு

கார் மெக்கானிக்கை அழைத்து சென்று பெற்றோர்கள் குழந்தையை மீட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore | Cuddalore

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் காருக்குள் சிக்க கொண்ட 2 வயது குழந்தை, 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தை சேர்நதவர் கொளஞ்சி ரேவதி தம்பதியினர். இவர்களது 2 வயது மகன் பாலாஜி, பக்கத்தில் வீட்டில் நின்று கொண்டிருந்த உறவினர் காரில் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக உள்ளே குழந்தை இருப்பதை மறந்து காருக்குள்ளேயே சாவியை வைத்து சென்றுவிட்டார். இதில், கார் ஆட்டோமேட்டிக்காக லாக் ஆகி கொண்டது.

சிறிது நேரம் கழித்து மகன் பாலாஜியை காணவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர். பிறகு காரில் இருப்பத்தை பார்தத்தும் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க | கட்சிக்கொடி ஏற்றுவதில் தகராறு.. ஒரே நேரத்தில் போராட்டம் செய்த விசிக-பாமக.. கடலூரில் பரபரப்பு!

உடனே சென்று காரை திறக்க முயன்றபோது, கார் திறக்கவில்லை. பின்னே சாவியை தேடியபோது சாவி, காருக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

செய்வதறியாது திகைத்த அவர்கள், அருகில் உள்ள கார் மெக்கானிக் அழைத்து சென்று குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 1 மணி்நேரம் போராட்டத்திற்கு பிறகு காரை திறந்து பாலாஜியை பத்திரமாக மீட்டனர்.

செய்தியாளர்: பிரேமானந்த், கடலூர்

First published:

Tags: Baby, Cuddalore, Local News