Home /News /cuddalore /

திருடிய இரும்பை விற்று பணம் பிரிப்பதில் தகராறு.. நண்பனுக்கு கத்திக்குத்து

திருடிய இரும்பை விற்று பணம் பிரிப்பதில் தகராறு.. நண்பனுக்கு கத்திக்குத்து

நண்பனை கத்தியால் குத்தியவர்

நண்பனை கத்தியால் குத்தியவர்

திருடி இரும்பை விற்று கிடைக்கும் பணத்தில் மது குடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Cuddalore, India
    திருடி இரும்பை விற்று பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்தி வாலிபரை கொலை செய்த நண்பனை போலீசார் கைது செய்தனர். 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தெற்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் மகன் ஆகாஷ்(வயது 22). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மகன் ஆகாஷ் (24) என்பவரும் நண்பர்கள்.  இருவரும் என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து இரும்பு பொருட்களை திருடி, அதனை இரும்பு கடைகளில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மது குடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலையிலும் இருவரும் என்.எல்.சி. சுரங்கத்திற்கு சென்று இரும்பு பொருட்களை திருடி வந்துள்ளனர். பின்னர் அதனை இரும்பு கடையில் எடைக்கு விற்று பணம் பெற்றுள்ளனர். இந்த பணத்தை பிரிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பணத்தில் மது வாங்கி இருவரும் குடித்தனர். போதை தலைக்கு ஏறியதும் பணம் பிரிப்பது தொடர்பாக இருவருக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருகொருவர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அந்த சமயத்தில் ஆகாஷ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கத்தியால் சரமாரியாக நண்பன் தமிழ்வளவனை குத்தினார்.

    ALSO READ |  தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்
     இதில் தமிழ்வளவன் மார்பில் குத்து விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர், நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ஊ.மங்கலம் போலீசார் விரைந்து சென்று தமிழ்வளவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    மேலும் நண்பன் ஆகாசை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    இது ஒருபக்கம் இருக்க போலீசாரின் விசாரணையில் ஆகாஷ் என்பவரின் காதலியின் அக்காவிடம் தமிழ்வளவன் பேசி பழகி வந்துள்ளார். இது ஆகாஷ்க்கு பிடிக்கவில்லை இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Crime News, Cuddalore

    அடுத்த செய்தி