ஹோம் /நியூஸ் /கடலூர் /

கடலூர், சீர்காழியை மீண்டும் மிரட்டிய மழை.. இரவெல்லாம் இடி மின்னல்.!

கடலூர், சீர்காழியை மீண்டும் மிரட்டிய மழை.. இரவெல்லாம் இடி மின்னல்.!

மழை

மழை

வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் கடலூர், சீர்காழியில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாட்டில் கனமழை மிரட்டி வருகிறது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, சீர்காழியில் நேற்று இரவும் மழை மிரட்டியது. சீர்காழி தாலுகா பகுதியில் இன்று அதிகாலையும் மழை பெய்தது.

    11 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை : வானிலை மையம் அலெர்ட்

    வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டி தீர்தது வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளகாடாக காட்சியளிக்கும் நிலையில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்நது கொண்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர் . கடலூர் மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து மழை விட்ட நிலையில் மக்கள் பெரும் நிம்மதி மூச்சுவிட்டனர்.

    ஆனாலும் மீண்டும் கடலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு மீண்டும் கன மழைபெய்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், ரெட்டிசாவடி, நெல்லிகுப்பம், பாலூர் ,ஆலப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இனி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

    சென்னையிலும் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையின் உள்பகுதிகளுலும் புறநகர்ப்பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்தது.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Weather News in Tamil