ஹோம் /நியூஸ் /கடலூர் /

என்.எல்.சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தக்க பாடம் புகட்ட வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்!

என்.எல்.சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தக்க பாடம் புகட்ட வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்!

வேல்முருகன்

வேல்முருகன்

உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் உட்பட 5000ற்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Neyveli, India

என்.எல்.சி., நிறுவனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரியான பாடம் புகட்ட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள என் எல் சி நிறுவனம், பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிலங்களை வாங்கி கொண்டு, வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை கண்டித்து பல்வேறு விவசாய கூட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பல நாட்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், என்எல்சி வளாகத்தில் பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும், கொடுக்கவிருப்போருக்கும் உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் உட்பட 5000-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் போராட்டம் வலுப்பெறும் என விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதனை முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு, என்.எல்.சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

First published:

Tags: CM MK Stalin, Neyveli, NLC, Velmurugan, Viduthalai Chiruthaigal Katchi