ஹோம் /நியூஸ் /கடலூர் /

முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்த அரசுப் பள்ளி... சாலை வசதி இல்லாததால் சேற்றிலும் சகதியிலும் வந்த அதிகாரிகள்..

முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்த அரசுப் பள்ளி... சாலை வசதி இல்லாததால் சேற்றிலும் சகதியிலும் வந்த அதிகாரிகள்..

புதிய பள்ளிக்கட்டிடம் மற்றும் சகதி நிறைந்த சாலை

புதிய பள்ளிக்கட்டிடம் மற்றும் சகதி நிறைந்த சாலை

புதிய வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடத்திற்கு விரைவாக சாலையை அமைக்க வேண்டுமென பொதுமக்களும் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

சீர்காழி அருகே கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சியில் திறந்துவைத்தார். 1கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டும் சாலை வசதி ஏற்படுத்தபடாததால் சேற்றிலும் சகதியிலும் வந்த அதிகாரிகள் அவதிக்குள்ளாகினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒரு கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை மற்றும்  ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்த நிலையில் தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் பள்ளியை திறந்து வைத்தார்.

கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன்,  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா,  வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா,  ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள்,  பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Read More : 10 வருட அதிமுக ஆட்சியில் தமிழகத்தையே சீரழித்துவிட்டார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இவ்வளவு பொருட் செலவில் புதிய கட்டிடடம் கட்டப்பட்டும் அதற்கு முறையான சாலை அமைக்கப்படவில்லை. மண் சாலை என்பதால் மழையில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. மேலும் விழாவிற்கு வருகை தந்த அதிகாரிகள் தங்களது வாகனங்களில் உள்ளே வர முடியாமல் பள்ளி முகப்பிலே வாகனத்தை நிறுத்திவிட்டு ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை சேரும் சகதியுமான பாதையில் மிகுந்த அச்சத்துடன் கடந்து வந்தனர்.அமைச்சர் வருவதற்கு முன் மழைநீரில் மண் கொட்டி சீரமைப்பக்கப்பட்டது.

ஒரு நாள் மழைக்கே சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் இச்சாலையை மாணவர்கள் நடந்து செல்ல கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே புதிய வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடத்திற்கு விரைவாக சாலையை அமைக்க வேண்டுமென பொதுமக்களும் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Sirkazhi