முகப்பு /செய்தி /கடலூர் / சிதம்பரம் பஸ் ஸ்டாப்பில் பள்ளி சீருடையில் தாலி கட்டிய விவகாரம்.. வீடியோ வெளியிட்ட நபர் கைது..!

சிதம்பரம் பஸ் ஸ்டாப்பில் பள்ளி சீருடையில் தாலி கட்டிய விவகாரம்.. வீடியோ வெளியிட்ட நபர் கைது..!

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

கைது செய்யப்பட்ட போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Chidambaram | Chidambaram Nm

சிதம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு மாணவன் ஒருவர் தாலி கட்டிய விவகாரத்தில் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டவரை போலீசார் வன்கொடுமைக்கு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவிகள், மாணவர்கள் தங்களது பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.

அவ்வாறு செல்லும்போது 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பள்ளி சீருடையிலும், பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் கல்லூரி சீருடையிலும் பேருந்து நிலையத்தில் அமர்ந்த படி தாலி கட்டிக் கொண்டனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் ஏற்கனவே மாணவருக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் இந்த வீடியோவை வெளியிட்ட சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜிகணேஷ் என்பவரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க | மொபைல் போனுக்கு வந்த நிர்வாண வீடியோ கால்: ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியை மிரட்டி ரூ.17.8 லட்சம் பறித்த மர்மப் பெண்!

அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து சிகிச்சை முடிந்த பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Arrest, Chidambaram, Child marriage, Cuddalore