பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வருகிற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த மாதம் 5 ஆம் தேதி தேரோட்டமும், 6 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
சிதம்பரம் சார் ஆட்சியர் ஸ்வேதா சுமன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், காவல் துறையினர், தீயணைப்புத்துறை, போக்குவரத்து துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும், வர்த்தகர் சங்கம் போன்ற சமூக, பொது நல அமைப்பு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், கோயில் திருவிழாவிற்காக ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்களது துறை தொடர்பான பணிகளை குறித்த நேரத்தில், சரியான முறையில் செய்து முடிக்க வேண்டும் என்றும், நடராஜர் கோவில் ஆரூத்ரா தரிசன விழாவினை மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் சிதம்பரம் சப்-கலெக்பர் சுவேதா சுமன் அறிவுரைகளை வழங்கினார்.
ஆருத்ரா தரிசன விழாவில் தினந்தோறும் சாமி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வந்து அருள் பாலிக்கிறார். 29ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், 30ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 31ஆம்தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 2ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3ஆம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4ஆம் தேதி தங்க ரதத்திலும் சாமி வீதி உலா நடைபெறும்.
தொடர்ந்து 5ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. ஆருத்ரா தாிசனம் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chidambaram, Cuddalore, Hindu Temple