ஹோம் /நியூஸ் /கடலூர் /

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதர்கள் சிறையில் அடைப்பு - 28ஆம் தேதி வரை காவல்!!

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதர்கள் சிறையில் அடைப்பு - 28ஆம் தேதி வரை காவல்!!

சிதம்பரம் தீட்சிதர்கள் கைது

சிதம்பரம் தீட்சிதர்கள் கைது

கைது செய்யப்பட்ட இருவரையும் வரும் 28ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chidambaram | Chidambaram Nm | Tamil Nadu

  18 வயது நிரம்பாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

  சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளராக இருக்கும் ஹேமசபேச தீட்சிதர் அவரது 13 வயது பெண் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேசன் என்கிற விஜயபாலன் தீட்சிதர், பெண் குழந்தையின் தந்தை ஹேமசபேச தீட்சிதர் இருவரும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  கைது செய்யப்பட்ட தீட்சிதர்கள் 2 பேர் சிதம்பரம் நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சிதம்பரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்

  திருமணம் நடைபெற்ற போது மாப்பிள்ளை ஞானசேகரன் என்ற ராஜரத்தினம் தீட்சிதருக்கு 17 வயது என்பதால் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் விசாரணை வளையத்தில் எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

  கைது செய்யப்பட்ட இருவரையும் வரும் 28ஆம் தேதி வரை காவலில் வைக்க ஜே,எம் 1 நீதிமன்ற நீதிபதிதீ தாரணி உத்தரவிட்டுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chidambaram, Cuddalore