ஹோம் /நியூஸ் /கடலூர் /

ஒருதலைக்காதல்.. சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்த இளைஞர்.!

ஒருதலைக்காதல்.. சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்த இளைஞர்.!

சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்த இளைஞர் கைது

சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்த இளைஞர் கைது

Chidambaram pocso arrest | மணிகண்டனின் நடத்தையில் சந்தேகமடைந்த சிறுமி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chidambaram | Cuddalore

சிதம்பரம் அருகே முன்னாள் காதலியின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் தவறாக வெளியிட்டவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிதம்பரம் அருகே 16 வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த கொத்தனார் தொழில் செய்து வரும்  மணிகண்டன் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மணிகண்டன் நடத்தையில் மாற்றம் தெரிந்ததால் 16 வயது சிறுமி பேசுவதை தவிர்த்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொத்தனார் மணிகண்டன் சிறுமியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, இது குறித்து, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் மணிகண்டனை சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Chidambaram, Crime News, Local News, Pocso