ஹோம் /நியூஸ் /கடலூர் /

கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவனை இழுத்துச்சென்ற முதலை - சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவனை இழுத்துச்சென்ற முதலை - சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

முதலை இழுத்து சென்ற சிறுவன்

முதலை இழுத்து சென்ற சிறுவன்

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன், முதலை கடித்து உயிரிழந்தார்

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

வடக்கு வேலகுடியைச் சேர்ந்த 18 வயதான திருமலை, தனது 2 நண்பர்களுடன் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது முதலை வருவதை உணர்ந்த அவர்கள், உடனடியாக கரையேற முயன்றுள்ளனர். இருவர் கரையேறிவிட்ட நிலையில், திருமலை மட்டும் முதலையிடம் மாட்டிக்கொண்டார்.

' isDesktop="true" id="845295" youtubeid="2pQq4bxq2As" category="cuddalore">

அவரை முதலை இழுத்துச்சென்ற நிலையில் கரையில் நின்ற நண்பர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திருமலையின் உடலை புதர் பகுதியில் முதலை இழுத்துச்சென்று வைத்திருந்த நிலையில், 2 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது.

First published:

Tags: Crocodile, Cuddalore, Local News