ஹோம் /நியூஸ் /கடலூர் /

சிதம்பரம் பஸ் நிலையத்தில் பேருந்தின் டயர் வெடித்து பயங்கர தீ விபத்து : நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

சிதம்பரம் பஸ் நிலையத்தில் பேருந்தின் டயர் வெடித்து பயங்கர தீ விபத்து : நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

சிதம்பரம் பஸ் விபத்து

சிதம்பரம் பஸ் விபத்து

இதனையடுத்து பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். பின்னர் 4 புறமும் தீ பற்றி எழுந்து பேருந்து முழுமையாக எரியத் தொடங்கியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chidambaram, India

  சிதம்பரம் பஸ் நிலையத்தில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி நோக்கி செல்ல இருந்த அரசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல இருந்த தமிழ்நாடு அரசு கும்பகோணம், சீர்காழி அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் திடீரென பேருந்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக டீசல் டேங்க் அருகே தீப்பிடித்து மளமளவென தீ பரவி பேருந்து எரியத் தொடங்கியது.

  இதனையடுத்து பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். பின்னர் 4 புறமும் தீ பற்றி எழுந்து பேருந்து முழுமையாக எரியத் தொடங்கியது. இதனை அடுத்து சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதன் காரணமாக பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேலும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சிதம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Bus accident, Fire accident