ஹோம் /நியூஸ் /கடலூர் /

பூனையை கண்டுபிடித்தால் ரூ.10,000 சன்மானம்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்..!

பூனையை கண்டுபிடித்தால் ரூ.10,000 சன்மானம்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்..!

வைரலாகும் போஸ்டர்

வைரலாகும் போஸ்டர்

பூனையின் புகைப்படத்தை பகிர்ந்த அவர், பூனையின் அடையாளத்தை போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Cuddalore | Cuddalore | Tamil Nadu

  தங்களது பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என உரிமையாளர் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

  கடலூர் வண்ணாரபாளையத்தில் ஜோஷி என்ற பூனை ஒன்று காணாமல் போயுள்ளது. இதனால் வேதனையடைந்த அதன் உரிமையாளர், ஜோஷி என்ற தங்களது பூனையை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டியுள்ளார்.

  அதில், பூனையின் புகைப்படத்தை சேர்த்த அவர், ஆண் பூனை, பெயர் ஜோஷி, வயது 3, நிறம் வெள்ளை, தலை மற்றும் வால் பகுதியில் சந்தன நிறம் இருக்கும், தேடி கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Cat, Cuddalore