ஹோம் /நியூஸ் /கடலூர் /

சிதம்பரத்தில் பாஜக மாவட்ட பிரச்சார தலைவர் மீது தாக்குதல்... 2 பேர் மீது வழக்குப் பதிவு

சிதம்பரத்தில் பாஜக மாவட்ட பிரச்சார தலைவர் மீது தாக்குதல்... 2 பேர் மீது வழக்குப் பதிவு

சிதம்பரத்தில் பாஜக மாவட்ட பிரச்சார தலைவர் மீது தாக்குதல்...  2 பேர் மீது வழக்குப் பதிவு

சிதம்பரத்தில் பாஜக மாவட்ட பிரச்சார தலைவர் மீது தாக்குதல்... 2 பேர் மீது வழக்குப் பதிவு

Chidambaram | கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பாஜக நிர்வாகி அறிமுக கூட்டத்தில் இருதரப்பினர் இடையேயான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chidambaram, India

சிதம்பரத்தில் பாஜகவின் மாவட்ட பிரச்சார தலைவரை தாக்கியதாக புகார் எழுந்ததுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் அதே கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரத் (28). இவர் பாஜகவின் மாவட்ட பிரச்சார தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக, இவர் அதே கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் மீது காவல்துறையிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் பாரத் நேற்று இரவு சிதம்பரத்தில் நடந்த நகரத் தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது மாவட்டத் துணைத் தலைவரான கோபிநாத் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என 2 பேரும் சேர்ந்து மாவட்ட பிரச்சார தலைவர் பாரத்தை ஆபாசமாக திட்டி, தாக்கி, மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பாரத் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார், பாஜகவின் மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் உள்ளிட்ட இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see... ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் சிஎம்

பாஜக நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரை, சக கட்சி நிர்வாகிகளே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

First published:

Tags: BJP, Chidambaram, Clash, Local News