Home /News /cuddalore /

உல்லாசத்துக்கு மறுத்த பெண் அடித்துக்கொலை.. கள்ளக்காதலன் வெறிச்செயல்

உல்லாசத்துக்கு மறுத்த பெண் அடித்துக்கொலை.. கள்ளக்காதலன் வெறிச்செயல்

கள்ளக்காதலன் கைது

கள்ளக்காதலன் கைது

Chidambaram : சிதம்பரம் அருகே பெண் துப்புரவு பணியாளர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், உல்லாசத்திற்கு மறுத்ததால் அவரை கள்ளக்காதலன் குழவி கல்லால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெண் துப்புரவு பணியாளர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். 2 வருடமாக கள்ளத்தொடர்பு இருந்த நிலையில், சம்பவத்தன்று உல்லாசத்துக்கு வர மறுத்ததால் குழவி கல்லால் அடித்துக் கொலை செய்ததாக பரபரப்பு தகவல் .

சிதம்பரத்தை அடுத்த புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதா(வயது 45). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி காலையில் இவர் வீட்டில் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து அவரது மகள் புவனகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மோப்பநாய் கொண்டு போலீசார் விசாரணை நடத்தியபோது, மோப்பநாய் கொலை நடந்த வீட்டின் பின்புறம் சென்று அங்கு கிடந்த குழவி கல்லை கவ்விப் பிடித்தது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சீதாவின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளியான குமார் (48) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சீதாவை அடித்துக் கொலை செய்ததை குமார் ஒப்புக்கொண்டார்.

சீதாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் குமார் புதுச்சேரியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். வாரம் ஒருமுறை விடுமுறையில் குமார் வீட்டிற்கு வருவார். சீதாவின் கணவர் இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீதாவுக்கும், குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் இருந்து வந்தவுடன் குமார், சீதாவுடன் உல்லாசமாக இருப்பாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு குமார்  சீதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சீதாவை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு சீதா வர மறுத்துள்ளார். இதனால் குமார் வலுக்கட்டாயமாக சீதாவுடன் உல்லாசத்திற்கு முயன்றபோது சீதா மீண்டும் மறுத்துள்ளார்.

Must Read : ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருடன் சேர்த்து கணவனையும் கைது செய்த போலீஸ்

இதனால் ஆத்திரமடைந்த குமார் அருகில் இருந்த  குழவி கல்லை எடுத்து அவரது தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தப்பி ஓடி விட்டார். இதை தெரிந்து கொண்ட புவனகிரி போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Arrested, Chidambaram, Cuddalore, Murder case

அடுத்த செய்தி