Home /News /cuddalore /

கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையில் நடந்த வளைகாப்பு!!

கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையில் நடந்த வளைகாப்பு!!

கொள்ளிடம் வெள்ள்ப்பெருக்கு கரையில்; நடந்த வளைகாப்பு - சீர்காழி

கொள்ளிடம் வெள்ள்ப்பெருக்கு கரையில்; நடந்த வளைகாப்பு - சீர்காழி

Sirkali | சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கடந்த ஆறு தினங்களாக ஆற்றுப்படுகை கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sirkali (Sirkazhi), India
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் கடந்த 6 நாட்களாக கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சீர்காழி அருகே நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

அதனால் இந்த பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி, காய்கறி வகைகள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளது. இந்த பகுதியில் கடந்த ஆறு நாட்களாக வீடுகளுக்குள் தண்ணீர்  புகுந்துள்ளதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் பாதுகாப்பு முகாம் மற்றும் தற்காலிக பந்தல் அமைத்து கரை சாலையிலேயே வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதி மக்கள் சொந்த வீட்டிற்கு செல்ல முடியாத சூழல் நிலவுவதால் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளவரசன் மனைவி சிவரஞ்சனிக்கு கொள்ளிடம் ஆற்றின் கரையில் வளைகாப்பு விழா நடைபெற்றது. ஆற்றங்கரை ஓரம் பொதுமக்கள் தங்குவதற்காக போடப்பட்டுள்ள பந்தலில் சிவரஞ்சனிக்கு சிறப்பாக வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

Also see... நாய்க்கடியால் பரவும் ரேபிஸ் நோய்க்கு அதிகரிக்கும் உயிரிழப்பு

முகாமில் தங்கி இருந்த அனைத்து பெண்களும் சிவரஞ்சனியை சந்தனம் பூசி, குங்குமம் வைத்து வாழ்த்தி சென்றனர். கடந்த ஆறு தினங்களாக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்து கேட்டுச் சென்றனர். தொடர்ந்து தண்ணீர் வடிய 5 தினங்களுக்கு மேல்  ஆகும் என்பதால் அப்பகுதி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Baby Care, Cuddalore, Flood, Sirkazhi

அடுத்த செய்தி