Home /News /cuddalore /

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை - நண்பர்களே கொன்ற கொடூரம்

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை - நண்பர்களே கொன்ற கொடூரம்

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India
    பண்ருட்டி அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இந்த வாக்குவாதம் முற்றியதில், நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஆட்டோ டிரைவர் சக்திவேலை கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக நண்பர்கள் சுமன் மற்றும் அவரது நண்பரை பிடித்து  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் படி, ஆட்டோ டிரைவர் சக்திவேலுக்கும் அவரது நண்பர் சுமனுக்கும் கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ALSO READ | தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் எவ்வளவு?

    இந்நிலையில் ஆட்டோ டிரைவர் சக்திவேல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரி சக்திவேலின் உறவினர்கள் பண்ருட்டி சேலம் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்த பிறகு உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டனர்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Auto Driver, Crime News, Cuddalore, Illegal affair, Murder

    அடுத்த செய்தி