ஹோம் /நியூஸ் /கடலூர் /

ரயில் வரும் சமயத்தில் பழுதான கேட்.. பரபரப்பான நேரத்தில் கைகொடுத்த இரும்பு சங்கிலி.. கடலூரில் திக் திக் சம்பவம்!

ரயில் வரும் சமயத்தில் பழுதான கேட்.. பரபரப்பான நேரத்தில் கைகொடுத்த இரும்பு சங்கிலி.. கடலூரில் திக் திக் சம்பவம்!

கேட் போடாமல் ரயில் செல்வதை அருகில் நின்று பார்க்கும் வாகன ஓட்டிகள்

கேட் போடாமல் ரயில் செல்வதை அருகில் நின்று பார்க்கும் வாகன ஓட்டிகள்

கம்மியம்பேட்டையில் ரயில்வே கேட் பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சாலையின் குறுக்கே சங்கிலி கட்டப்பட்டதால் ரயில் அனுப்பி வைக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Cuddalore, India

  கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கம்மியம்பேட்டை ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கானவர்கள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும். இன்று காலை 8. 45 மணிக்கு மன்னார்குடி திருப்பதி எக்ஸ்பிரஸ் இந்த வழியாக செல்லும்போது ரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடும்போது ஒரு பகுதி கேட் மட்டுமே மூடியது. மற்றொரு பகுதி கேட்டு மூடாததால் பரபரப்பு ஏற்பட்டது.

  இதனால் ரயில் வந்து கொண்டிருக்கும் போது வாகன ஓட்டிகள் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ரயில்வே ஊழியர்கள் அருகில் இருந்த இரும்பு சங்கிலியால் சாலையின் ஒரு பகுதியில் இழுத்து கட்டி விட்டு ரயிலை அனுப்பி வைத்தனர்.

  பின்னர் ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள் வந்து பழுதான கேட்டை சரி செய்து மீண்டும் பரிசோதனை செய்து பார்த்தனர். இந்த பிரச்னையால்  கம்மியம் பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அடிக்கடி இந்த கேட் பழுதாகி வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.

  Also see... பைக்கில் ட்ரிபிள்ஸ்.. நிறைமாத கர்ப்பிணியை 2மணி நேரம் ரோட்டில் நிற்க வைத்த காவலர்.. வலுக்கும் கண்டனம்!

  கேட் மூடி இருக்கும்போது அதை தூக்கிவிட்டு கடந்து செல்வதால் பழுதாவதாக ரயில்வே ஊழியர்களும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  செய்தியாளர்: பிரேம், கடலூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Cuddalore, Railway Station