ஹோம் /நியூஸ் /கடலூர் /

செய்தியாளர்களை ஒருமையில் பேசிய அண்ணாமலை... சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

செய்தியாளர்களை ஒருமையில் பேசிய அண்ணாமலை... சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

செய்தியாளர்களை ஒருமையில் பேசிய அண்ணாமலை

செய்தியாளர்களை ஒருமையில் பேசிய அண்ணாமலை

Bjp Annamalai | பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் ஆத்திரத்துடன் ஆவேசமாக பத்திரிகையாளர்களை பார்த்து “மரத்து மேல குரங்கு தாவுவது போல ஏன் இப்படி தாவுகிறீர்கள். ஊர்ல நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என ஒருமையில் பேசினார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  செய்தியாளர்களை ஒருமையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையின் செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

  இதனிடையே, பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அப்போது, அவர்,  பத்திரிகையாளர்களை பார்த்து “மரத்து மேல குரங்கு தாவுவது போல ஏன் இப்படி தாவுகிறீர்கள். ஊர்ல நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என ஒருமையில் பேசினார். இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர் அங்கிருந்து ஆத்திரத்துடன் சென்றார்.

  இதையும் படிங்க : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  அண்ணாமலையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள். பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே” என குறிப்பிட்டுள்ளார்.

  இதேபோல், இந்த சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்  பாஜக தலைவர் அண்ணாமலை தீபாவளி மதுவிற்பனை எண்ணிக்கை குறித்து பேசிவிட்டு, இது தொடர்பாக என் மீது வேண்டுமானால் வழக்கு போடுங்கள், பத்திரிகையாளர்களை மிரட்டாதீர்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறிவுரை கூறியிருந்தார்.

  ஆனால் இரண்டு நாட்களுக்குள் இன்று (27-10-2022) வியாழக்கிழமை கடலூரில் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றபோது ஆத்திரமடைந்து மரத்து மேல குரங்கு போல தாவித்தாவி சுற்றி சுற்றி வருகிறீர்கள் என  தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கிறார்.

  அமைச்சர் செந்திபாலாஜி கூறிய கருத்துக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு நாய், பேய் சாராய வியாபாரிக்கு எல்லாம் பதில் கூறமுடியாது எனவும் ஆவேசப்பட்டிருக்கிறார். அவரது அரசியல் எதிர்வினைகள் குறித்து நாம் விமர்சிக்க வேண்டியதில்லை. ஆனால் அண்ணாமலை செய்தியாளர்கள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தி குரங்குகள் என்று தரக்குறைவான விமர்சனம் செய்திருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

  எனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும்  என்று கூறியுள்ளனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Annamalai, BJP