Home /News /cuddalore /

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனி திருமஞ்சன திருவிழா... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனி திருமஞ்சன திருவிழா... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...

சிதம்பரம் நடராஜருக்கு இன்று ஆனி திருமஞ்சனம்

சிதம்பரம் நடராஜருக்கு இன்று ஆனி திருமஞ்சனம்

பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெகு விமர்சியாக இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பூமியின் மையப்பகுதியாக கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன திருவிழாவும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக ஆனி திருமஞ்சன விழா கொரோனா தொற்றின் காரணமாக நடைபெறவில்லை. தற்பொழுது கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக விமர்சியாக நடைபெற்றது.

ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றி துவக்கி வைத்தார், அதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, முக்கிய  வீதிகளை வலம் வந்தனர். பின்னர் இரவு தேர் நிலைக்கு வந்த உடன், சுவாமிகள் தேரில் இருந்து இறக்கப்பட்டு, கோயில் உள்ளே உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்திருந்தனர்.

இன்று காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு ஆராதனைகள், ஆபரண அலங்காரம் செய்யப்பட்டு சித்சபையில் ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவரான நடராஜர், சிவகாமசுந்தரி நடனம் ஆடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

உற்சவர் - நடராஜர்


இதனை தொடர்ந்து சுவாமிகளை தீட்சிதர்கள் கருவறைக்கு கொண்டு சென்றனர். இவ்விழாவில் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Also see...   சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனி திருமஞ்சன தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம்...

நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வண்ணம் போக்குவரத்து போலிசார் வழிதடங்களை மாற்றி அமைத்துள்ளனர். ஆனி திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு நகர் பகுதியை சுற்றியுள்ள அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chidambaram, Natarajan

அடுத்த செய்தி