Home /News /cuddalore /

கடலூரில் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 11ம் வகுப்பு மாணவி: 10ம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு

கடலூரில் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 11ம் வகுப்பு மாணவி: 10ம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு

கடலூரில் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 11ம் வகுப்பு மாணவி: 10ம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு

Cuddalore | பள்ளியின் கழிவறையில் 11-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. கழிவறையின் அருகிலேயே குழந்தை இறந்து கிடந்த நிலையில் மாணவியிடம் விசாரணை நடக்கிறது. 11-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில், மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான 10-ம் வகுப்பு மாணவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India
கடலூர் மாவட்டம், புவனகிரியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள கழிவறைக்கு அருகே இறந்த நிலையில் ஆண் குழந்தை சடலம் வெள்ளிகிழமை கிடந்தது. பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் குழந்தை உயிரிழந்து கிடந்தது. இதை பார்த்த மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் தெரிவிக்க அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்குதான் இந்த குழந்தை பிறந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அந்த மாணவியின் விவரங்களை கண்டுபிடித்த போலீசார், அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவியின் உறவினரின் மகன் 10-ம் வகுப்பு படிக்கும் நிலையில், அவர்தான் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று வயிற்று வலி ஏற்படவே கழிவறைக்கு சென்ற மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை கழிவறையின் பின்புறம் போட்டுவிட்டு சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான 10-ம் வகுப்பு மாணவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த மாணவியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Also see... ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க... சிறப்பு ரோந்துக் குழு அமைப்பு...



மாணவியும், மாணவரும் 18 வயதிற்கும் குறைவான சிறுவர், சிறுமி என்பதால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Cuddalore, Pregnant, School student

அடுத்த செய்தி