Home /News /cuddalore /

பாஜக ஒன்றிய தலைவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - சிதம்பரத்தில் பரபரப்பு..!

பாஜக ஒன்றிய தலைவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - சிதம்பரத்தில் பரபரப்பு..!

கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்

கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்

நள்ளிரவில் ஆள் இல்லாத நேரத்தில் பாஜக ஒன்றிய தலைவரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chidambaram | tamil a
    சிதம்பரம் அருகே பாஜக ஒன்றிய தலைவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை சலங்கைக்கார தெருவை சேர்ந்தவர் தாமரை முருகன். இவர் பரங்கிப்பேட்டை பாஜகவின் வடக்கு ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல், தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் காரை நிறுத்தியிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் ஆள் இல்லாத நேரத்தில்  கார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் காரின் பின் பக்க டயர் எரிந்து லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை காரை எழுந்து பார்த்த பாஜக ஒன்றிய தலைவர் அதிர்ச்சியடைந்தார்.

    மேலும், இது குறித்து பரங்கிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்: பிரசண்னா - சிதம்பரம்
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Bomb, Chidambaram

    அடுத்த செய்தி