ஹோம் /நியூஸ் /கடலூர் /

கடலூர்: அதிகாலையில் கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

கடலூர்: அதிகாலையில் கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

விபத்துக்குள்ளான கார்

விபத்துக்குள்ளான கார்

நின்ற கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்டம் வேப்பூர் எல்லையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில் அவ்வழியாக வந்த லாரி நின்று கொண்டிருந்த காரின் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி  இந்த திடீர் விபத்தில் 2 இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உடலைக் கைப்பற்றிய  வேப்பூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட உடல்கள் வேப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

First published:

Tags: Car accident, Cuddalore