ஹோம் /நியூஸ் /கடலூர் /

ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்... 1 கி.மீ. தூரம் நடந்தே சென்று ரயிலை நிறுத்திய பெண்!

ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்... 1 கி.மீ. தூரம் நடந்தே சென்று ரயிலை நிறுத்திய பெண்!

ரயிலை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டு

ரயிலை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டு

Train stopped | தகவல் தெரிவித்த பெண்ணை, ரயில்வே போலீசார் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore | Panruti | Cuddalore

பண்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் தகவல் கொடுத்த பெண்ணால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

கடலூர் - விழுப்புரம் வழியாக நாள் தோறும் ஏராளமான ரயில்கள் சென்று கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம்  பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிராமம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பபட்டுள்ளது.

இதனை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த மஞ்சு என்ற பெண் பார்த்துள்ளார். உடனடியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று சேந்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயிலை நிறுத்தினர்.

தொடர்ந்து விரிசல் விழுந்திருந்த ரயில்வே தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் சீர்செய்தனர். பின்னர் ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு ரயில் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து தகவல் தெரிவித்த மஞ்சுவை, ரயில்வே போலீசார் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினர்.

செய்தியாளர்: பிரேமானந்த், கடலூர்.

First published:

Tags: Cuddalore, Local News, Panruti Constituency, Train