Home /News /cuddalore /

சிறுவன் ஓட்டிச்சென்ற பைக் மோதி 3 வயது குழந்தை பலி: சிறுவன், தந்தை கைது

சிறுவன் ஓட்டிச்சென்ற பைக் மோதி 3 வயது குழந்தை பலி: சிறுவன், தந்தை கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Cuddalore district News: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே 13 வயது சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகனம் மோதி 3 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய சிறுவன் மற்றும் அவனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Cuddalore, India
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விஜயமாநகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜின் 3 வயது மகள்  வீட்டின் வாசலில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த சிவகுரு என்பவரின் மகனான 13 வயது சிறுவன், நிலைதடுமாறி சிறுமி  மீது மோதியதில் சிறுமி அசைவற்று கிடந்தாள். பின்னர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள்,ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில், இருசக்கர வாகனத்தை ஓட்டிய சிறுவன் மற்றும் சிறுவனின் தந்தை சிவகுரு மீது மங்களம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுவனிடம் விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை ஓட்டக் கொடுத்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்து மங்களம்பேட்டை போலீசார் சிறுவனின் தந்தையை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய சிறுவனையும் கைது செய்து கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

சிறுவனின் தந்தை சிவகுரு, நெய்வேலி என்.எல்.சி.-யில் ஒப்பந்த தொழிலாளியாக பணியில் உள்ளார். இவரது வீட்டில் பசு மாடு ஒன்று உள்ளது. சிவகுரு மாலை என்.எல்.சி வேலைக்கு சென்றுவிடுவது வழக்கம். இந்நிலையில், மங்களம்பளட்டை அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் பள்ளி முடிந்தது மாலை வீட்டிற்ககு வந்து, பால் கேனை பைக்கில் மாட்டி கொண்டு விஜயமாநகரில் உள்ள பால் கமிட்டிக்கு கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு பால் கேனை எடுத்து கொண்டு சென்ற போதுதான் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கடலூர், மாவட்டத்தில் பொதுவாக சாலைகளில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதை இயல்பாக காண முடிகிறது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதன்படி போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரு சக்கர வாகனங்கள் அல்லது கார் ஓட்டி வரும் சிறுவர்கள் பிடிபட்டால், இந்திய தண்டனையியல் சட்ட விதிகளின்படி பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரித்திற்ககு மேற்பபட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Accident, Arrested, Bike, Cuddalore

அடுத்த செய்தி