ஹோம் /நியூஸ் /கடலூர் /

ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பாஜக மாநில செயற்குழு கூட்டம்

பாஜக மாநில செயற்குழு கூட்டம்

இன்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் எச் ராஜா, சி பி ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சசிகலா புஷ்பா உள்ளிட்ட உயர் மட்ட குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இந்த பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் நடந்த அராஜகத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.
சேது கால்வாய் திட்டம் அமைக்கப்படும் பொழுது ராமர் பாலம் பாதிக்கப்படாமல் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம். 
காசி தமிழ் சங்கத்தை தந்த பிரதமருக்கு தீர்மானத்தில் பாராட்டு.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராம பட்டியலின மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டி தீர்மானம். 
பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்ற சம்பவங்களில் இருந்து காக்க தவறிய திமுக அரசை கண்டித்து தீர்மானம்.
ஒவ்வொரு பொங்கல் பண்டிகை பொழுதும் பொங்கல் பரிசாக கரும்பு வழங்குவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு பாஜக போராட்டத்திற்கு பிறகு கரும்பு வழங்கப்பட்டது அதை கண்டித்து தீர்மானம்.
திமுக ஆட்சியில் தமிழகம் தொழில் வளர்ச்சித் துறையில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்து தீர்மானம். 
ஆளுநர் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம். 
பாஜகவின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நட்டாவிற்கு பாராட்டி தெரிவித்து தீர்மானம்.
First published:

Tags: Annamalai, BJP, CM MK Stalin, RN Ravi