ஹோம் /நியூஸ் /Cuddalore /

தடுப்பணை நீரில் மூழ்கி 7பேர் பலி - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

தடுப்பணை நீரில் மூழ்கி 7பேர் பலி - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

கடலூர்

கடலூர்

கடலூரில் தடுப்பணை நீரில் மூழ்கி 7பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கடலூர் மாவட்டம் ஏ.குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவர் சிறுமிகள் அப்பகுதியில் பாய்ந்தோடும் கெடிலம் ஆறு தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளனர்.  அப்போது எதிர்பாராத விதமாக 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 7பேரும் சிறுவர் சிறுமிகள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

  தடுப்பணையின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 7பேரின் உடலையும் கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Breaking News, Died