Home /News /cuddalore /

சிவன் அனுப்பினார், ரூ.45,000 கொடு.. நூதன மோசடியில் கொள்ளை.. பின்னணி என்ன?

சிவன் அனுப்பினார், ரூ.45,000 கொடு.. நூதன மோசடியில் கொள்ளை.. பின்னணி என்ன?

சிவனடியார் என்று கூறி கடலூரில் கைதான 5 பேர்

சிவனடியார் என்று கூறி கடலூரில் கைதான 5 பேர்

Cuddalore | கடலூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், சிவனடியார்கள் என்று கூறி 45 ஆயிரம் ரூபாய் பறிக்க முயன்ற, போலி சாமியார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India
    வடலூரில் வசிக்கும் 30 வயதான பெண் ஜோதிமணி தனது வீட்டில் தனியாக இருந்த போது, காரில் வந்த 5 பேர், தாங்கள் சிவனடியார்கள் என்றும், திருவண்ணாமலையில் இருந்து வருவதாகவும் அவரிடம் கூறி உள்ளனர். அதில், சாமியார் வேடம் அணிந்திருந்தவர், உங்கள் வீட்டிற்கு அருள் கொடுக்க சிவன் தங்களை நேரடியாக அனுப்பியதாகவும், அதற்கு கைமாறாக திருவண்ணாமலையில் உள்ள சிவன் கோயிலில் அன்னதானம் போட 45,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தவறினால் சாமி குற்றம் ஆகிவிடும் அருள் கிடைக்காது என கூறி பயமுறுத்தி உள்ளார்.

    இதனால், கையில் இருந்த 3000 ரூபாயை மட்டும் ஜோதிமணி கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட நபர்கள், மீதி பணத்தை சிறிது நேரம் கழித்து வந்து வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். அதையடுத்து, சிறிது நேரத்தில் ஜோதிமணியின் 8 வயது மகன் மகேஷ்வரன் வீட்டுக்கு வந்தவுடன், தமது குடும்பத்தை பற்றி 5 பேர் விசாரித்ததாக தாயிடம் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த ஜோதிமணி, சாமியார்கள் குறித்து வடலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.



    Also see... 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன மனைவியின் சமாதி அருகே கணவரும் புதைப்பு

    இதையடுத்து ராகவேந்திராசிட்டி செல்லும் வழியில் உள்ள ஒரு டீக்கடையில் நின்றிருந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டம் குருவிமலையை சேர்ந்த போலி சாமியார் சேகர் என்பதும், அவருக்கு உடந்தையாக இருந்து 4 பேர் நூதனமுறையில் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலி சாமியார் சேகர் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cheating case, Crime News, Cuddalore

    அடுத்த செய்தி