முகப்பு /செய்தி /கடலூர் / சிதம்பரம் அருகே குடிசை மாற்று குடியிருப்பு கட்டுவதில் முறைகேடு... 2 அதிகாரிகள் சஸ்பென்ட்

சிதம்பரம் அருகே குடிசை மாற்று குடியிருப்பு கட்டுவதில் முறைகேடு... 2 அதிகாரிகள் சஸ்பென்ட்

சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்

சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்

சிதம்பரம் அருகே குடிசை மாற்று குடியிருப்பு கட்டுவதில் 1 கோடி 5 லட்சம் முறைகேடு செய்ததாக 2 அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Chidambaram, India

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 188 வீடுகள் கடந்த 2018ம் ஆண்டு ரூ.23 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. தற்பொழுது அந்த பணிகள் முடிவுரும் தருவாயில் வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னிலையில் இந்தப் பணியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு துறையினர் தாமாக முன்வந்து புகாரை எடுத்து விசாரணை செய்ய ஆரம்பித்தனர். விசாரணையில் ரூ. 1 கோடியே 5 லட்சம்  முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த முறை கேட்டில் S.எட்வின்சாம், செயற்பொறியாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், கடலூர் (தற்போது சென்னையில் கண்காணிப்பு பொறியாளராக உள்ளார்) ஜெயக்குமார், உதவி பொறியாளர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், கடலூர் கோட்டம் (தற்போது உதவி செயற்பொறியாளர், காஞ்சிபுரம்) ஆகிய 2 பேரும்  முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Also see...கோவையில் 6வது புத்தக கண்காட்சி: மாணவ, மாணவிகள் உற்சாகமாக

மேலும் எட்வின் சாம் என்பவர் வருகின்ற 31.07.2022 அன்று ஒய்வு பெற உள்ள நிலையில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடுத்தக்காது.

top videos
    First published:

    Tags: Crime News, Cuddalore