Home /News /cuddalore /

புதுவை மதுவை கடத்தி வந்து போலி ஸ்டிக்கர் ஒட்டி தமிழகத்தில் விற்பனை: 2 பேர் கைது

புதுவை மதுவை கடத்தி வந்து போலி ஸ்டிக்கர் ஒட்டி தமிழகத்தில் விற்பனை: 2 பேர் கைது

புதுவை மதுபாட்டலை கடத்தி வந்து போலி ஸ்டிக்கர் ஒட்டி தமிழகத்தில் விற்பனை செய்த 2 பேர் கைது...

புதுவை மதுபாட்டலை கடத்தி வந்து போலி ஸ்டிக்கர் ஒட்டி தமிழகத்தில் விற்பனை செய்த 2 பேர் கைது...

Cuddalore | புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் மதுபான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரூ.2½ லட்சம் மதிப்பிலான மதுபானங்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India
    கடலூர் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி  உத்தரவின் பேரின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிக்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் அம்பலவாணன்பேட்டை பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 45) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது அங்கு ஏராளமான மதுபாட்டில் அட்டைப் பெட்டிகள் இருந்தது. இதை பார்த்த போலீசார் அதனை சோதனை செய்ததில், 35 அட்டை பெட்டிகள் முழுவதும் 1680 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து அங்கிருந்த ஏழுமலை, சமட்டிக்குப்பத்தை சேர்ந்த ராஜா (41) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சமட்டிக்குப்பத்தை சேர்ந்த அன்பழகன், சபாபதி, தனசேகரன், புதுச்சேரியை சேர்ந்த குமரன், குள்ளஞ்சாவடியை சேர்ந்த மும்மூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் மதுபான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும், பின்னர் அந்த மதுபாட்டில்களில் தமிழ்நாட்டு மதுபாட்டில் போல் போலி ஸ்டிக்கர் ஒட்டியதும் தெரியவந்தது.

    Also see...உதகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் 'சைக்லோமைன்' மலர்கள்

    தொடர்ந்து ஏழுமலை, ராஜா ஆகியோரை கைது செய்த போலீசார் ரூ.2½ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அன்பழகன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    குள்ளஞ்சாவடி டாஸ்மாக் கடை அருகில் ஏழுமலை பார் வைத்து நடத்தி வருகிறார். இவர் திமுக பிரமுகர். இந்த சம்பவத்தில் தி.மு.க. பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: பிரேம் ஆனந்த், கடலூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cuddalore, Puducherry, Tamil Nadu, Tasmac

    அடுத்த செய்தி