ஹோம் /நியூஸ் /கடலூர் /

சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 12வயது சிறுவன் பலி

சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 12வயது சிறுவன் பலி

சிறுவன் பலி

சிறுவன் பலி

நெடுஞ்சாலை துறையை கண்டித்து  விருத்தாசலம் -உளுந்தூர்பேட்டை சாலையில் கிராம மக்கள் சிறுவனின் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhachalam, India

விருத்தாசலத்தில்  பேருந்து நிலையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அக்கிராமத்தில் பேருந்து நிழற் கூடம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.  கடந்த சில நாள்களாக பெய்த மழையில் பேருந்து நிழற்கூடத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நீர் நிரம்பி உள்ளது.

இந்த  நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் வினோத் குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சிறுவன் உயிரிழப்புக்கு நெடுஞ்சாலை துறையின் அலட்சியமே காரணம் என கிராம மக்கள் குற்றச்சாட்டினர். மேலும் நெடுஞ்சாலை துறையை கண்டித்து  விருத்தாசலம் -உளுந்தூர்பேட்டை சாலையில் அக்கிராம மக்கள் சிறுவனின் உடலை வைத்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் தனபதி மற்றும் மங்களம்பேடடை போலீசார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து சிறுவனின் உறவினர் போராட்டத்தை கைவிட்டனர்.பின்னர் உயிரிழந்த சிறுவனின் உடல் ஆம்புலன்ஸ்  மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Published by:Ramprasath H
First published:

Tags: Cuddalore, Death, Tamil News