வேப்பூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற செம்மறி ஆடுகள் மீது அரசு பேருந்து மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த இருபது ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி , உளுந்தூர்பேட்டை, பகுதியில் செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு எலவசனூர் கோட்டையில் இருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னூறுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்பொழுது லட்சுமணன் தனது இருசக்கர வாகனத்தில் ஆடுகளின் பின்னால் வந்துள்ளார். வேப்பூர் நோக்கி வரும் போது சேப்பாக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே பின்னால் வந்த செங்கலப்பட்டு பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து திருச்சி நோக்கி சென்ற போது ஆடுகள் மீது மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் தேசிய நெடுஞ்சாலையில் உடல் சிதறி உயிரிழந்தது.
ஆடுகளை ஓட்டுக்கொண்டு வந்த லட்சுமணன் மீதும் மோதி அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். அரசு பேருந்து பின்னால் வந்த அதே பணிமணையைச் சேர்ந்த மற்றொரு பேருந்து மற்றும் தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிஷ்ட வசமாக சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சிதறிக் கிடந்த செம்மறி ஆடுகளை சாலையோரம் அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நெரிசலானது.
அதனைத் தொடர்ந்து போலீசார் அரை மணிநேரத்திற்கு மேலாக போராடி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
செய்தியாளர்: பிரேம், கடலூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore, Goat Liver, Road accident