கொரோனா பரவலால் அதிகரிக்கும் ஆன்லைன் சந்திப்புகள்: கிடுகிடுவென வருவாயை உயர்த்திவரும் Zoom வீடியோ ஆப்

பொதுமுடக்கத்தால் ஜூம் வீடியோ செயலியின் வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலால் அதிகரிக்கும் ஆன்லைன் சந்திப்புகள்: கிடுகிடுவென வருவாயை உயர்த்திவரும் Zoom வீடியோ ஆப்
Zoom App
  • Share this:
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக பெரும்பாலானோர் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வரும் சூழலில், அலுவலக கூட்டம், மாணவர்களுக்கு பாடம் என பல பணிகளும் ஜூம் செயலி மூலம் நடத்தப்படுகின்றன. ஜூம் வீடியோ செயலி மூலம் ஒரே நேரத்தில் குறைந்தபட்சம் 100 நபர்களுடன் காணொளியில் சந்திக்கும் வசதி உள்ளது.

கட்டண திட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்கவும் மற்றும் பதிவு செய்யும் வசதி போன்றவற்றால் ஜூம் செயலி அனைவருக்கும் ஏற்றதாக மாறிவிட்டது.  இதனால், ஜூம் வீடியோ செயலி மூலம் ஈட்டப்படும் வருவாய் முந்தைய காலாண்டைவிட 27 கோடி அதிகரித்துள்ளது. பிப்ரவரி- ஏப்ரல் இடைப்பட்ட காலாண்டில் 169 விழுக்காடு வரை அதிகரித்து 2,471 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டியுள்ளது.

2021-ஆம் ஆண்டில் Zoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்து சுமார் 14, 000 ரூபாய் வரை அதிகரிக்கும் என அமெரிக்காவின் நாஸ்டாக் கணித்துள்ளது.


மேலும் படிக்க...

நகருக்குள் புகுந்த காட்டெருமைக் கூட்டம்: பதறியடித்து ஓடிய மக்கள்.. 
First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading