பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஜாபர் மிர்சாவிற்கு கொரோனா... ட்விட்டரில் உருக்கப் பதிவு

பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஜாபர் மிர்சாவிற்கு கொரோனா... ட்விட்டரில் உருக்கப் பதிவு
பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஜாபர் மிர்சாவிற்கு கொரோனா
  • Share this:
பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஜாபர் மிர்சாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 5,36,000 அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், பிரேசிலில் பாதிப்பு 16,04,585 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்தை கடந்துள்ளது. பெருவில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது.

ஸ்பெயின், சிலி, பிரிட்டன், மெக்சிகோ, இத்தாலி ஆகிய நாடுகள் அதிகம் பாதிப்பை சந்தித்த நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,31,017 ஆக உள்ளது. 4,745 பேர் உயிரிழந்துள்ளனர்.


 



இதனிடையே பாகிஸ்தானில் சுகாதாரத்துறை அமைச்சர் ஜாபர் மிர்சாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என ட்வீட் செய்துள்ளார்.  ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியும் சிகிச்சையில் உள்ளார் .
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading