கொரோனா பரவும் நேரத்துல இந்த விளையாட்டு தேவையா சாஹல்..? அதுவும் கன்னத்தை கிள்ளி...

கொரோனா பரவும் நேரத்துல இந்த விளையாட்டு தேவையா சாஹல்..? அதுவும் கன்னத்தை கிள்ளி...
  • Share this:
கொரோனா பரவும் இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலுடன் இளம்பெண் செய்த டிக்-டாக் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டு வீரர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது. கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கொரோனா பரவாமல் இருக்க கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இளம் பெண்ணுடன் சேர்ந்து வெளியிட்டுள்ள டிக்-டாக் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் சாஹலை சிரித்தப்படியே நடந்து வருகிறார். அப்போது தனது ஷூ லேஸை சரி செய்ய சாஹல் குனியும் போது சட்டென்று அந்த பெண் அவருக்கு பின் மறைந்து கொள்கிறார்.


அந்த பெண்ணை தேடுவது போல் சாஹல் போக்கு செய்ய அந்த பெண் அவருக்கு முன் வருகிறார். அந்த பெண்ணை செல்லமாக சலித்து கொள்ளும் சஹாலின் கன்னத்தை அவர் பிடித்து கிள்ளி விளையாடுகிறார்.சாஹல் இதுப்போன்ற குறும்புதனமான பல வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் மற்றவர்களுடன் தொட்டு பேசும் இதுப் போன்ற வீடியோ தேவைதானா என்று பலரையும் கேட்க வைக்கிறது.

 சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading