சானிடைசரை மொத்தமாக வாங்கி வாட்ஸ்அப் குரூப் மூலமாக அதிக விலைக்கு விற்பனை செய்த இளைஞர்கள் கைது!

சானிடைசரை மொத்தமாக வாங்கி வாட்ஸ்அப் குரூப் மூலமாக அதிக விலைக்கு விற்பனை செய்த இளைஞர்கள் கைது!
கார்த்திகேயன் மற்றும் முஹமது நிஜாம்
  • Share this:
சென்னை கோடம்பாக்கத்தில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர்கள் கார்த்திகேயன் மற்றும் முஹமது நிஜாம்  என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைகளை கழுவும் சானிடைசருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சானிடைசர், முகமூடி ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்த மத்திய அரசு, பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது குற்றம் என்று அறிவித்தது.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள், 144 தடை உத்தரவு வருவதற்கு முன்பாகவே மெடிக்கல் ஷாப்களில் மொத்தமாக சானிடைசர் மற்றும் முக கவசங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துள்ளனர்.


பின்னர் வாட்ஸ்அப் குழு மூலமாக சானிடைசர் மற்றும் முக கவசங்கள் விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக
தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கார்த்திகேயனின் இடத்தில் நடத்திய சோதனையில் 250 சானிடைசர் பாட்டில்கள் மற்றும் முக கவசங்களை பறிமுதல் செய்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் கார்த்திகேயனை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்திய போது வீட்டில் 1500-க்கும் அதிகமான சானிடைசர் பாட்டில்கள் மற்றும் முக கவசங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கார்த்திகேயனின் நண்பரான முஹம்மது நிஜாமுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பரான முஹம்மது நிஜாம் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த இருந்து 1500 க்கும் அதிகமான சானிடைசர் பாட்டில்கள் மற்றும் முக கவசங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also see...
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading