Home /News /coronavirus-latest-news /

தேனியில் கொரோனா தனிமை முகாமில் இளைஞர் தற்கொலை

தேனியில் கொரோனா தனிமை முகாமில் இளைஞர் தற்கொலை

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 75 பேர் தங்களை வீடுகளுக்கு அனுப்பக் கோரி ஒன்று கூடினர்.

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 75 பேர் தங்களை வீடுகளுக்கு அனுப்பக் கோரி ஒன்று கூடினர்.

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 75 பேர் தங்களை வீடுகளுக்கு அனுப்பக் கோரி ஒன்று கூடினர்.

    தேனி மாவட்டம் போடியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

    மகாராஷ்டிராவில் வேலை பார்த்து வந்த, டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், சிறப்பு ரயில் மூலம், தேனி வந்துள்ளார். மாவட்ட எல்லையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லையென தெரிந்தது. இருப்பினும் வெளி மாநிலத்தில் இருந்து வந்திருப்பதால், தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அவருடன் மேலும் 2 நபர்கள் அறையில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் இல்லாத நேரத்தில் சசிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 75 பேர் தங்களை வீடுகளுக்கு அனுப்பக் கோரி ஒன்று கூடினர். அவர்களை சுகாதாரத்துறையினர் சமாதானப்படுத்தி அங்கேயே இருக்க செய்தனர்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Suicide, Theni

    அடுத்த செய்தி