கொரோனா முகாமிலிருந்து தப்பிய இளைஞர் சினிமா பாணியில் திருமணம்... மதுரையில் பரபரப்பு சம்பவம்

கொரோனா முகாமிலிருந்து தப்பிய இளைஞர் சினிமா பாணியில் திருமணம்... மதுரையில் பரபரப்பு சம்பவம்
மாதிரி படம்
  • Share this:
மதுரையில் கொரோனா முகாமில் கண்காணிக்கப்பட்ட இளைஞர்கள் சினிமா பாணியி்ல் தப்பியோடி சிறுமியை திருமணம் செய்ததும், அவரை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழபுங்குடி வலையதாரனிபட்டியைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர், துபாயில் பணியாற்றி வந்துள்ளார். அந்த இளைஞர் அதே ஊரைச் சேர்ந்த சிறுமி ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் போதெல்லாம் தனது காதலை இளைஞர் தீவிரப்படுத்தியுள்ளார். சம்மந்தப்பட்ட சிறுமியும் காதலை ஏற்ற நிலையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட தொலைபேசி உரையாடல் முலம் இளைஞருடனான காதலை நீட்டித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு சிறுமி வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஞாயிறு அன்று சிறுமி மேஜர் வயதை அடைவதால் மறுநாள் திங்களன்று அவருக்கு அவசர திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலையும் சம்மந்தப்ப்பட்ட சிறுமி இளைஞர்க்கு தெரிவித்ததால் அடுத்த3 மாதம் கழித்து இந்தியா வரவேண்டியவர் அவசர அவசரமாக கடந்த 20ம் தேதி துபாயிலிருந்து விமானம் முலம் மும்பை வந்தார்.


அங்கிருந்து மதுரை வந்து ஊர் திரும்பி, பெண் கேட்கலாம் என நினைத்திருந்த போது, மதுரை விமான நிலையத்தில் நடந்த சோதனையில் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததால், அவரை மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு மையத்தில்  கொண்டு வந்தனர். நாள் நெருங்க நெருங்க தன் காதலி கைவிட்டு போய்விடுவாளோ என்கிற அச்சத்தில் தன்காதலியை கரம் பிடிக்க திட்டமிட்டார் அந்த இளைஞர்.

இதற்காக நாடோடிகள் பட பாணியில் தன் கிராம நண்பர்கள் சிலர் உதவியோடு காதலியை கடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன் படி மதுரை சின்ன உடைப்பு கொரோனா மையத்தில் உள்ள தன்னை அழைத்து செல்ல ஒரு நண்பர் குழு, அதே போல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தன் காதலியை கடத்த ஒரு நண்பர் குழு என இரு குழுக்களை இருந்த இடத்திலிருந்தே நியமித்தார், திட்டமிட்டபடி அதிகாலையில் அனைத்து கட்டுப்பாடுகளையும் கடந்து சுவர் ஏறி குதித்து கொரோனா மையத்திலிருந்து தப்பினார்.

முன்பு திட்டமிட்ட படி தனது காதலியையும் ஓரிடத்தில் வரச் செய்து தாலி கட்டியுள்ளார். காலை நடந்த கணக்கெடுப்பில் இளைஞர் தப்பியது தெரிந்த நிலையில் சுகாதார துணை இயக்குனர் முத்துவேல் சார்பில் மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞரின் வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் அங்கு அவர் வரவில்லை. பின்னர் விசாரித்ததில் சம்மந்தப்பட்ட சிறுமி மாயமானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிவகங்கை அருகே அவர்கள் இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்த்த போது நண்பர்கள் உதவியோடு சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது.

கொரோனா தொற்று இருப்பவர் என சந்தேகிக்கப்படும் நிலையிலும், அவர் சிறுமி என்பதாலும் அவரை மீட்ட போலீசார்,சிவகங்கையில் உள்ள காப்பகம் ஒன்றில் தனியாக வைத்து கண்காணித்து வருகின்றனர். அதே நேரத்தில் கண்காணிப்பை மீறி தப்பியோடிய அவரை கைது செய்து மதுரை சின்ன உடைப்பு காப்பகத்திற்கு மீண்டும் அழைத்து வந்து அங்கு வைத்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்