Home /News /coronavirus-latest-news /

ட்ரோன் கேமரா.... புதர்களில் ஓடி மறைந்த இளைஞர்கள், சிறுவர்கள்...!

ட்ரோன் கேமரா.... புதர்களில் ஓடி மறைந்த இளைஞர்கள், சிறுவர்கள்...!

கேமராவை கண்டதும் ஓடும் இளைஞர்கள்

கேமராவை கண்டதும் ஓடும் இளைஞர்கள்

சாராயம் காய்ச்சுவதாக தகவல் வந்ததை அடுத்து போலீசார் சோதனை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் போலீசாரின் ட்ரோன் கேமராவை பார்த்ததும் இளைஞர்கள் தெறித்து ஓடி, புதர்களில் மறைந்தனர்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இளைஞர்கள் பலர் ஒன்றாக கூடி கபடி, கேரம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் பல இடங்களில் ஹெலிகேமரா பயன்படுத்தி வருகின்றனர்.

மானாமதுரை தாலுகாவில் இடைக்காட்டூர் பகுதி வைகை ஆற்று பகுதிகள், கிளங்காட்டூர் பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதாக தகவல் வந்ததை அடுத்து சோதனை நடத்தினார். அதே போல் மானாமதுரை வைகை ஆறு போன்ற பகுதிகளில் நேற்று மாலை மானாமதுரை டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பறக்கும் கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

துரத்திய ட்ரோன் கோமரா தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள்


இடைக்காட்டூர் வைகை ஆற்றில் கேமராவை பார்த்ததும் இளைஞர்கள், குழந்தைகள், நாய் உட்பட அனைவரும் தலைதெறிக்க ஓடி மறைந்தனர். கிளங்காட்டூர், மிக்கேல்பட்டினம் பகுதியில் உள்ள கருவேல மரங்களின் இடையில் இருந்த இளைஞர்கள் பலரும் கேமராவை பாத்ததும் ஓட்டம் பிடித்தனர். இதனால் தொடர்ந்து பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட மானாமதுரை போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Drone, Sivagangai

அடுத்த செய்தி