முகப்பு /செய்தி /கொரோனா / முதலமைச்சர் இங்குவந்து கொரோனாவைக் காட்டவேண்டும்: போலீசாரிடம் வாதிட்ட இளைஞர்..!

முதலமைச்சர் இங்குவந்து கொரோனாவைக் காட்டவேண்டும்: போலீசாரிடம் வாதிட்ட இளைஞர்..!

அறந்தாங்கியில் மாஸ்க், ஹெல்மெட் ஏன் போடவில்லை என கேட்ட போலீசாரிடம் அடுக்கடுக்காக சத்தம் போட்ட இளைஞர்.

அறந்தாங்கியில் மாஸ்க், ஹெல்மெட் ஏன் போடவில்லை என கேட்ட போலீசாரிடம் அடுக்கடுக்காக சத்தம் போட்ட இளைஞர்.

அறந்தாங்கியில் மாஸ்க், ஹெல்மெட் ஏன் போடவில்லை என கேட்ட போலீசாரிடம் அடுக்கடுக்காக சத்தம் போட்ட இளைஞர்.

  • Last Updated :

முதலமைச்சரை வரச்சொல்லி கொரோனா வைரஸைக் காட்ட சொன்ன இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அறந்தாங்கி போலீசார் விசாரித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி பகுதியை சேர்ந்த இளைஞர், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை நிறுத்திய போலீசார், 144 தடை உத்தரவை எடுத்துக் கூறினர். அதோடு மாஸ்க், ஹெல்மெட் ஏன் போடவில்லை என அவரிடம் விளக்கம் கேட்டனர்.

அதற்கு அந்த இளைஞர்,   முதலமைச்சரை வரச் சொல்லுங்கள், கொரோனா வைரஸை கண்ணில் காட்ட சொல்லுங்கள் என்று சத்தமாக பேசினார். மேலும் அடுக்கடுக்கான மொழியில் சத்தம் போட்டும், கைகளை உயர்த்தியும் போலீசாரிடம் அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனால் கோபமடைந்த அறந்தாங்கி போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see...


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

top videos


    First published:

    Tags: CoronaVirus