தனிமை தற்கொலைக்கு தூண்டுகிறது...! அமித்ஷாவிடம் உதவி கேட்ட இளைஞர்

தனிமை தற்கொலைக்கு தூண்டுகிறது...! அமித்ஷாவிடம் உதவி கேட்ட இளைஞர்
  • Share this:
கொரோனா அச்சத்தால் 144 தடை உத்திரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அறையில் முடங்கி கிடப்பதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது என்றும் தனக்கு உதவும் படி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு  இளைஞர் ஒருவர் டிவிட்  செய்துள்ளார். இதனை அறிந்த கோவை போலீசார் அவரைபத்திரமாக மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராம் .இவர்  கோவையில் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார் . கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவரால் சொந்த ஊரான கோத்தகிரிக்கு செல்ல முடியவில்லை.

கோவை  கவுண்டர் மில் பகுதியில் உள்ள தனது அறையில் தனிமையில் ராம் தங்கியிருந்தார். தனக்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் எனவும் தனிமையில் இருப்பது தற்கொலை எண்ணங்களை தூண்டுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டிவிட் செய்திருந்தார்.


இந்நிலையில் இந்த டிவிட்டை பார்த்த கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண்,  இது குறித்து விசாரிக்கும்படி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாருக்கு அறிவுறுத்தினார்.  இதைத்தொடர்ந்து கவுண்டர் மில் பகுதியிலுள்ள இளைஞர் ராமின் அறைக்கு சென்ற போலீசார் வரை மீட்டனர்.

பின்னர் அவரை சாலைக்கு அழைத்து வந்து , தடையை மீறி  இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை சொல்லும் பணியில் ஈடுபடுத்தினார். எனினும் இளைஞர் ராம்  மன அழுத்தம் குறையாத நிலையில் ,  கண்டிப்பாக ஊருக்கு செல்ல வேண்டும் என்று போலீசாரிடம்  வலியுறுத்தினார்.

இதை தொடர்ந்து  இருசக்கர வாகனத்திலேயே இளைஞர் ராம்  கோத்தகிரி செல்வதற்கான ஏற்பாடுகளை கோவை போலீசார் செய்து கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ராம் இருசக்கர வாகனம் மூலம் கோத்தகிரி சென்றடைந்தார்.Also see...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading