கொரோனாவின் எதிரொலியால் வேலை இழந்தவர் யூடியூப் பார்த்து ஏடிஎம்-ல் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.
புதுச்சேரி நகரின் மையத்தில் சுய்ப்ரே வீதியில் ஸ்டேட் பேங்க் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த வங்கி வளாகத்திலேயே ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகின்றது . கடந்த 12-ஆம் தேதி இரவு அங்குள்ள ஏ.டி.எம். மையத்துக்கு வாலிபர் ஒருவர் பணம் எடுக்க வருவது போல் வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடும் முயற்சியில் ஈடுபட்டார்.
முன்கதவை திறந்த அவரால் லாக்கரை உடைக்க முடிய வில்லை. இதற்கிடையே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்ததால் அலாரம் ஒலித்தது. அதனால் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். போலீசார் வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூர் பகுதியை சார்ந்த பிரபு என்கிற அப்பு என்று தெரியவந்துள்ளது. அவரை பிடித்து விசாரித்ததில் புதுச்சேரி பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் என்றும் கொரோனாவால் கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்துள்ளார் எனவும் தெரிய வந்தது.
வேலை இல்லாத காரணத்தினால் பணத்தை திருடுவது எப்படி என யோசித்தார். எதுவும் சிக்கவில்லை. இதனால் தனது மொபைலில் யூடியூப் பார்த்து அதன்மூலம் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்ததாகவும், உடைக்க தெரியாமல் உடைந்ததால் அலாரம் அடித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் பயத்தில் தப்பியோடிவிட்டதாகவும் போலீசாரிடம் கூறினார். தொடர்ந்து அவர் கொள்ளைக்கு பயன்படுத்திய அரிவாள், இருசக்கர கிக்கர் ராடு, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த இளைஞரை சிறையில் அடைத்திருப்பதாக காவல் கண்காணிப்பாளர் மாறன் தெரிவித்துள்ளார்.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.