• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒரே நாளில் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒரே நாளில் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு

ஊடகவியலாளர் மனோஜ் குமார்

ஊடகவியலாளர் மனோஜ் குமார்

ஹைதராபாத்தில் இயங்கிவரும் தெலுங்கு மொழிச் சேனலில் பணிபுரியும் குற்றப்பிரிவு ஊடகவியலாளர் (வயது 30) மனோஜ்குமார் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட ஒரு நாளில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • Share this:
    தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றிய இளம் ஊடகவியலாளர் மனோஜ் குமாருக்கு, அறிகுறிகள் தெரியவே காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒரே நாளில் மையஸ்தீனியா க்ரேவிஸ் (Myasthenia Gravis) என்னும் நிலை, அதாவது சுவாச வழித்தட தசை உட்பட அனைத்து தசைகளும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார்.

    TV5 ஊடகவியலாளர் மனோஜ்குமார்


    காந்தி மருத்துவமனை துணை சூப்பரிண்டென்ட் அளித்த தகவலில், மனோஜ் குமார் பைலேட்ரல் நிமோனியாவுடனான கோவிட்-19 (Bilateral Pnuemonia with Covid-19) காரணமாக காலை 9.30 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே தைமஸ் சுரப்பி அறுவை சிகிச்சை செய்து தைமஸ் அகற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒரு நாளில், இளம் ஊடகவியலாளர் உயிரிழந்திருக்கும் இந்த நிகழ்வு, செய்தியாளர்கள் மத்தியில் பயத்தையும், பாதுகாப்பு குறித்த விவாதங்களையும் அதிகப்படுத்தியுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: