கிருமி நாசினி செயல்பாடு கொண்டதாக சுவர் பெயிண்டுகளுக்கு ஆதரவு, ஆரோக்கியக் கேடான எல்.இ.டி. பல்புகளுக்கு ஆதரவு, ஆனால் ஆயுர்வேத மருந்துகள், ஆயுர்வேத மருத்துவம் போலி அறிவியலா என்று பதஞ்சலி தலைமைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா இந்திய மருத்துவச் சங்க டாக்டர்களை நோக்கி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆங்கில தனியார் ஊடகம் ஒன்றில் ஆச்சாரியா கூறியதாவது:
எங்களைக் குறிவைத்து தொடர்ந்து தாக்கிப் பேசி வருகின்றனர். ஆயுர்வேத சிகிச்சையை போலி அறிவியல் என்று சாடுகின்றனர். ஆனால் சுவர் பெயிண்ட் ஒன்று 99% பாக்டீரியாவைக் கொல்கிறது என்று ஆதரிக்கின்றனர். இது வைரஸ் பரவலைத் தடுக்கும் என்று ஐ.எம்.ஏ டாக்டர்கள் புரொமோட் செய்கின்றனர். உடல் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்கின்றனர்.
இந்தப் பெயிண்ட் சுவாசப்பிரச்சினைகளை குறைக்கிறதாம். சருமத்திற்கும் ஆபத்தில்லையாம். இது போலி அறிவியல் இல்லையா?
ஐஎம்ஏ அதிகாரிகளுக்கு ஆயுர்வேதம் பற்றிய போதிய ஆய்வு அறிவில்லை, அவர்கள் தயார் என்றால் நாங்கள் பயிற்சி அளிக்கத் தயார்.
என்றார் ஆச்சார்யா.
ஐஎம்ஏவில் சுமார் 3.5 லட்சம் டாக்டர்கள் நவீன அலோபதி மருத்துவத்தையே தொழிலாகச் செய்துவருகின்றனர், இவர்கள் பதஞ்சலியின் கொரோனில் மாத்திரையை எந்த அடிப்படையில் பரிந்துரை செய்தீர்கள் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தனுக்கு கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் பதஞ்சலி ஆவேசத்துக்குப் பதில் அளித்த ஐ.எம்.ஏ, ”நாங்கள் எந்த பொருளையும் விளம்பரம் செய்யவில்லை, மாறாக நாங்கள் புதிய தொழில்நுட்பம், அறிவியலின் புதிய கண்டுப்பிடிப்புகளையே வரவேற்கிறோம். ஐஎம்ஏ 92 ஆண்டுகளாக இயங்கி வருகிறது, பதஞ்சலியின் சான்றிதழை நாங்கல் எதிர்பார்க்கவில்லை” என்றார் காட்டமாக.
ஆனால் ஆச்சாரியா விடவில்லை, அவர், “எல்.இ.டி. பல்புகள் 85% பாக்டீரியாக்களை கொல்கிறது என்கின்றனர், எங்களிடம் கொரோனில் குறித்து கேள்வி எழுப்பும் இவர்கள் எல்.இ.டி. பல்புகள் பாக்டீரியாக்களை கொல்லும் என்பதற்கு ஆதாரம் வைத்திருக்கிறார்களா? என்ன அறிவியல் அளவு கோல் இருக்கிறது, இப்படிப்பட்ட புரமோஷனுக்காக என்ன கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தினால் மக்களுக்கு நல்லது” என்றார்.
இதற்கும் பதிலளித்த ஐஎம்ஏ கொரோனிலுக்கு எதிராக எங்களுக்கு ஒன்றுமிலலி நாங்கள் அறிவியல்பூர்வமான ஆதாரங்களையே கேட்டோம். இதில் என்ன தவறு இருக்க முடியும்? நாங்கள் செய்வது பிராண்டை புரோமோட் செய்வதல்ல, ஒரு கூட்டமைப்பாகச் செயல்படுகிறோம் அவ்வளவே என்கிறது ஐ.எம்.ஏ.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.