• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • CoWIN : ‘கோவின்’ இணையதளத்தில் புதிய வசதி : தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்து கொள்ளலாம்

CoWIN : ‘கோவின்’ இணையதளத்தில் புதிய வசதி : தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்து கொள்ளலாம்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

18 முதல் 44 வயது வரையிலான பயனாளிகள் தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்து உடனடியாக தடுப்பூசி போடும் வசதியை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது.

  • Share this:
    நாடு முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த பிரிவினருக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து தடுப்பூசி போடும் முறை மட்டுமே அமலில் இருந்தது.

    இவ்வாறு பதிவு செய்யும் பலர், குறித்த நேரத்தில் தடுப்பூசி மையத்திற்கு வராததால் பல இடங்களில் தடுப்பூசி டோஸ்கள் வீணாவது தெரியவந்தது. எனவே இதை தடுக்கும் வகையில் தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்து உடனடியாக தடுப்பூசி போடும் வசதியை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது.

    அந்தவகையில் தடுப்பூசி மையங்களிலேயே இந்த பதிவுகளை மேற்கொள கோவின் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகள் அரசு தடுப்பூசி மையங்களில் மட்டுமே கிடைக்கும் எனவும், தனியார் மையங்களில் இருக்காது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

    Must Read : குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை ஜூனில் தொடங்கும்: பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு !

     

    இந்த வசதி குறித்து அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

    நாடு முழுவதும நேற்று ஒரேநாளில் 2,22,315 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,454 பேர் உயிரிழந்துள்ளனர். 3,02,544 பேர் 24 மணி நேரத்தில் குணமடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: