ஆக்சிஜன் தட்டுபாட்டால் உயிரிழப்பவர்களைக் காப்பாற்ற இனி CRED செயலி மூலம் நீங்களும் உதவலாம்..

மாதிரிப்படம்.

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்களை வாங்குவதற்கு கிரெட் செயலி (CRED) செயலி மூலம் நீங்களும் உதவ முடியும்.

  • Share this:
நாடு முழுவதும் சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரன் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வீடுகளில் ரிங்காகும் தொலைபேசிகளிலும், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களிலும் யாராவது ஒருவரின் சோகச் செய்தி அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக உதவி கேட்கும் செய்திகள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. நாடு  முழுவதும் பலர் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும், முறையாக ஆக்சிஜன் கிடைக்காமலும் பரிதவித்து வருகின்றனர். ஏராளமானோருக்கு உதவி தேவைப்படுகிறது. டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் தங்களால் இயன்ற உதவிகளை மனிதாபிமானமிக்கவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அவர்களுடன் கிரெட் செயலியும் இணைந்து கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. Milaap என்ற சுகாதாரத்துக்காக நிதி திரட்டும் நிறுவனத்துடன் கரம்கோர்த்துள்ள CRED செயலி, தங்களது வாடிக்கையாளர்கள் கிரெட் செயலி மூலம் சேகரிக்கும் காயின்களை நன்கொடையாக அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. அதாவது, கிரெட் செயலி மூலம் கிரெடிட் கார்ட் பில் செலுத்தும்போது, யூசர்களுக்கு காயின்கள் சிறப்பு பரிசாக கொடுக்கப்படுகிறது. அதனை நன்கொடையாக வாடிக்கையாளர்கள் கொடுக்கும்போது, மிலாப் நிறுவனம் அந்த தொகையை ஒருங்கிணைத்து, ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் வாங்கி மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுக்க உள்ளது. இதன்மூலம் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் தட்டுபாட்டால் உயிரிழப்பவர்களை காப்பாற்ற முடியும் என கிரெட் செயலி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கிரெட் வாடிக்கையாளர்கள் அளிக்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மையை கொடுக்கும் நோக்கில், மே 3ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் அளிக்கும் நன்கொடையால் அளிக்கப்பட்ட ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் குறித்த தகவல் கிரெட் செயலியில் இடம்பெறும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒருமுறை தீர்ந்துவிட்டால் மீண்டும் நிரப்ப வேண்டும் மற்றும் போக்குவரத்து சேவை போன்ற விஷயங்கள் இருப்பதால், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை நன்கொடையாக அளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கிரெட் செயலி விளக்கம் கொடுத்துள்ளது.

ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றை எடுத்து அதில் இருக்கும் நைட்ரஜனை அப்படியே வெளியேற்றிவிட்டு ஆக்சிஜனை மட்டும் நோயாளிகளுக்கு வழங்கும். நோயாளிகளுக்கு தூய ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்றாலும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் மூலம் அதிகபட்சம் 95 விழுக்காடு தூய்மையான ஆக்சிஜனை மட்டுமே கொடுக்கும். இருப்பினும், 85 விழுக்காடுக்கும் குறைவாக ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு உயிருக்கு போராடுபவர்களுக்கு ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் பெருமளவு உதவும். ஐ.சி.யூ பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இது உதவாது. இருப்பினும், உயிர்காக்க ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் பெரும் உதவியாக இருக்கும்.

வாடிக்கையாளர் கிரெட் செயலி மூலம் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் காயின்களைக் கொண்டு யாரோ ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவ முடியும் என்பதால், பலரும் இந்த பணப்பரிவர்த்தனையை செய்ய முன்வரவேண்டும் என கிரெட் செயலி கேட்டுக்கொண்டுள்ளது. 10,000 கிரெட் பாயிண்ட்ஸைக் நன்கொடையாக அளித்தால் ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன், 25 ஆயிரம் கிரெட் பாயிண்ட்ஸ் நன்கொடையாக அளித்தால் 2,500 லிட்டர் ஆக்சிஜனும் இலவசமாக கொடுக்கப்படும். ஒரு லட்சம் கிரெட் பாயிண்ட்ஸ் மூலம் 10,000 லிட்டர் ஆக்சிஜன் நன்கொடையாக கொடுக்கலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: