கொரோனாவை ஒழிக்க சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்திய யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் கொரோனா மையமாக மாறி வரும் நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனாவைக் கட்டுப்படுத்த நேற்று ஒரு மணி நேரம் ருத்ராபிஷேக பூஜை நடத்தினார்.

 • Share this:
  முதல்வர் யோகிக்கும் கொரோனா தொற்றியது. தற்போது குணமான யோகி ஆதித்யநாத் தன் சொந்த மாவட்டமான கோரக்பூருக்கு இரண்டு நாள் பயணமாக நேற்று வந்திருந்தார். அப்போது, அங்குள்ள கோரக்நாத் கோயில் மடத்திலிலுள்ள தனது வீட்டில் கரோனாவை விரட்ட சிறப்பு பூஜை நடத்தினார்.

  சிவனுக்கு ருத்ராபிஷேகப் பூஜை நடத்தினார். அதற்கான வேத மந்திரங்களை பண்டிதர்கள் ஓத, 11 லிட்டர் பாலாபிஷேகம் சிவலிங்கத்திற்கு நடத்தப்பட்டது.

  அருகம்புல்லின் சிறப்பு நீரும் ஐந்து லிட்டர் அளவில் அபிஷேகம் செய்யப்பட்டது. மற்றொரு கடவுளான விநாயகரை வணங்கி துவக்கப்பட்ட இப்பூஜைக்கு கோரக்நாத் மடத்தின் தலைமை பண்டிதரான ராமானுஜம் திரிபாதி தலைமை தாங்கினார்.

  கொரோனாவை விரட்ட நடத்தப்பட்ட இந்த சிறப்பு பூஜைக்கு பின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்திலுள்ள கோசாலைக்கும் சென்றார். அங்கிருந்த பசுக்களை வணங்கி அவைகளுக்கு உணவளித்தார்.

  பெரிய மாநிலமான உ.பி.யின் முதல்வராக தனது பொன்னான நேரத்தில் சுமார் அரை மணி நேரம் கோசாலையில் முதல்வர் யோகி செலவிட்டிருந்தார். தற்போது கொரோனாவிற்காக கோரக்நாத் மடத்தின் கோயில் மூடி வைக்கப்பட்டுள்ளது.

  இதனால், பக்தர்கள் எவரும் இன்றி அமைதியான சூழல் காணப்பட்டது. இதில், முதல்வர் யோகி தனிமையில் நடத்திய சிறப்பு ருத்ராபிஷேகப் பூசையால் கொரோனா விரட்டியடிக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் உத்தரப்பிரதேசத்திலிருந்து கங்கை நதியில் உடல்கள் தூக்கி எறியப்பட்டிருப்பதாக பீகார் அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பீகாரில் பாயும் கங்கை நதியில் சுமார் 100 உடல்கள் மிதக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சுமார் 100 பிணங்கள் நதியில் மிதந்ததாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

  உள்ளூர்வாசிகள் கூறுகையில், இந்த உடல்கள் அருகாமையில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்களால் நதியில் தூக்கி எறியப்பட்டவையாக இருக்கலாம். சிகிச்சை அளிக்கப்படாமல் வீட்டிலேயே இறப்பவர்களின் உடல்களை நதியில் தூக்கி எறிந்திருக்கலாம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  கங்கை நதியில் அழுகிய நிலையில் 50 முதல் 100 உடல்கள் வரை மிதந்து கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உடல்கள் அனைத்தும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் என வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுற்றுப்புற கிராமத்தினருக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
  Published by:Muthukumar
  First published: