கொரோனா வைரஸால் இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது - யோகி பாபு உருக்கம்

கொரோனா வைரஸால் இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது - யோகி பாபு உருக்கம்
யோகி பாபு
  • Share this:
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோவை நடிகர் யோகி பாபு தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று திரைத்துறை பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் யோகி பாபு வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறப்பட்டிருப்பதாவது, “ பிரதமர் மற்றும் முதலமைச்சர் சொன்னது போல் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடித்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பல இடங்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இனி ஒரு உயிர்கூட இதனால் போகக் கூடாது. அதற்காக நாம் அரசாங்கம் சொல்லக்கூடிய விஷயங்களை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.


வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தால் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். நாம் வணங்கும் தெய்வங்களும் இதிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: நண்பனின் உடலை சுமந்து சென்று இறுதி மரியாதை செய்த சந்தானம்!First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading