• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஊஹானில் 99 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: அறிகுறிகள் இல்லாமல் 300 பேருக்கு தொற்று

ஊஹானில் 99 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: அறிகுறிகள் இல்லாமல் 300 பேருக்கு தொற்று

கோப்புப்படம்

கோப்புப்படம்

சீனாவின் ஊஹான் நகரில் 99 லட்சம் பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக ஒருவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
    சீனாவின் ஊஹான் நகரில் 99 லட்சம் பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக ஒருவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கக்கூடும் என்ற அச்சத்தால் ஊஹானில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் திட்டம் கடந்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கியது.

    ஜூன் ஒன்றாம் தேதி வரை கிட்டத்தட்ட 99 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக ஒருவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லாமல் பாதிக்கப்பட்ட 300 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் மூலம் யாருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...

    நீண்டகாலமாக தொடர்ந்து வரும் நில விவகாரம்: ஆந்திர முதல்வருடன் புதுச்சேரி அமைச்சர் சந்திப்பு

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: